இத்தாலியின் வடக்குப்பகுதியில் உள்ள டிரேவிசோ என்ற நகரில் வாழ்ந்துவரும் 55 மதிக்கத்தக்க செல்வந்தர் ஒருவர் கார் விபத்து ஒன்றில் இறந்து போன தனது 20 வயது மகனின் பிரிவை தாங்க முடியாத தந்தை மகனது உடலை வைரமாக்கியுள்ளார்.
தனது மகனின் அஸ்தியை சுவிட்சர்லாந்தில் உள்ள ஆய்வகம் ஒன்றிற்கு அனுப்பி வைத்ததுடன் இதனை வைரமாக மாற்றி தருமாறு கோரயுள்ளார். இதனை தொடர்ந்து சுவிட்சர்லாந்து ஆய்வகம் அந்த அஸ்தியில் உள்ள காபனைப் பிரித்தெடுத்து ஒரு அறையில் வைத்து அதிக அழுத்தம் மற்றும் எரிமலை ஒத்த வெப்பத்தை அந்த அறைக்குள் செலுத்தி அதனை வைரமாக மாற்றி தந்தைக்கு அனுப்பிவைத்துள்ளது.
சரியாக எட்டு மாதங்களில் இந்த அஸ்தி வைரம் செய்யப்பட்டுள்ளதுடன் இதற்காக 18,000 டாலர் செலவானதாக தந்தை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment