சிறிதரன் எம்.பிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: இரா.சம்மந்தன் மற்றும் ஏ.சுமந்திரன் ஆதரவு?
தமிழீழ விடுலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நாடாளுமன்றத்தில் புகழந்தமைக்காக சி.சிறிதரன் எம்.பிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த 26 ஆம் திகதியன்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் அன்று அவரை புகழ்ந்து இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
இது இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஊக்குவிப்பதாக அமையும் என்ற அடிப்படையில் அரசியல் அமைப்புக்கு முரணான செயல் என்று இலங்கையின் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாஸவை புலிகள் கொலை செய்தமையை கருத்திற் கொண்டு ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிதரனுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சமரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன் ஆகிய இருவரும் சிறிதரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரா.சம்மந்தன் மற்றும் ஏ.சுமந்திரன் ஆகியோர் சிறிதரனின் கருத்து தொடர்பாக வெளிப்படையாகவே தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
5 comments :
The move taken against him is a fantastic idea .Hope it will bring the other peculiar characters
into a disciplinary cord.
This black sheep should be removed from the Tamil area. This selfish idiot works only for Tamil diaspora not for the Tamil people in Sri lanka who elected him. Definitely the Tamil people hate the stupid Pirabakaran and other LTTE leaders who caused the whole destruction and lost of innocent lives.
Now the Tamil people in Sri lanka want a new chapter, That to resolve our problems with wise and smart way.
London Tamils
மேற்குலகின் (இவர்கள் கூறும் சர்வ தேசம்) சதியில் எவ்வளவு பங்கை இவர்கள் வகிகிறார்கள் என்பது புரிகின்றது, இந்த தேச துரோகிகளுக்கு ஒரே தண்டனை மரணம் மட்டுமே, இவர்களால் நம் நாடும் மக்களும் 30 வரும் பட்ட துன்பம் போதும், 2 கோடி மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் சில வேண்டப்படாதவர்கள் அழிக்கப் பட வேண்டும்.
ஸ்ரீதரனுக்கு மரணதண்டனை வழங்குங்கள்
ஸ்ரீதரனுக்கு மரணதண்டனை வழங்குங்கள்
Post a Comment