தூதரக அதிகாரிகளுக்கு மட்டுமே இனி அடையாள அட்டை!
அமெரிக்காவில் இந்திய துணைத்தூதர் தேவயானி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளின் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க மத்திய அரசு உத்தரவிட்டதுடன் இதற்கான கெடு நேற்றுடன் முடிந்தது.
இதனையடுத்து அடையாள அட்டைகள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டுள்ளதுடன் இனிமேல் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு மட்டும் தான் அடையாள அட்டை வழங்கப்படும் என்பதுடன் தூதரக அதிகாரிகளின் குடும்பங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட மாட்டாது எனவும் மத்தியரசு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment