தேசிய கீதத்தில் திருத்தம் மற்றும் போரின் போது உயிரிழந்த புலி உறுப்பினர்களுக்கு நட்டஈடு என்பன ஏற்க முடியாது: கோதபாய!
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றினால் முன்வைக்கப்பட் டுள்ள தேசிய கீதத்தில் திருத்தம் செய்யப்படுதல் மற்றும் போரின் போது உயிரிழந்த புலி உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்குதல் போன்ற கோரிக்கைகளை ஏற்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்து ள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் 500க்கும் மேற் பட்ட பரிந்துரைகளையும் அமுல்படுத்த முடியாது என்பதுடன் இவற்றில் ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன என குறிப்பிட்டதுடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ள வடக்கு கிழக்கு இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டு மென்பதை நடைமுறைப்படுத்த முடியாது எனக்குறிப்பிட்டார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படக் கூடியவாறான பரிந்துரைகளை அமுல்படுத்த முடியாது என அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment