Tuesday, December 31, 2013

தற்கொலை நடத்த வந்த பெண்ணுடன் கள்ளத் தொடர்பா : குமுறுகிறார் பொன்சேகா!!

தற்கொலை தாக்குதல் நடத்த வந்த பெண்ணுக்கும் எனக்கும் கள்ள தொடர்பு இருந்ததாக பிரதியமைச்சர் சரண குணவர்தன சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு எதிராக வழக்கு தொடர போவ தாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரி வித்தார். இதற்கு எதிராக வழக்கு தொடராமல் இருக்க வேண்டு மாயின் 14 நாட்களுக்குள் 500 மில்லியன் ரூபாவை செலுத்து மாறு கோரி சட்டத்தரணி ஊடக கடிதம் அனுப்பி வைக்கப்பட் டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்.

பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு கடந்த 19 ஆம் திகதி சட்டத்தரணி ஊடாக வழக்கு தொடர போவதாக கடிதம் அனுப்பியுள்ளோம். முன்னாள் இராணுவ தளபதியான தனக்கு ஏற்படுத்திய அவதூறுக்கு இழப்பீடாக 500 மில்லயின் ரூபாவை வழங்க வேண்டும் என அதில் கேட்டுள்ளோம். எனக்கு ஏற்படுத்திய அவதூறுக்கு தொகையை நிர்ணயம் செய்ய முடியாது எனினும் பிரதியமைச்சருக்கு ஒரு பாட த்தை கற்பிக்க வேண்டும் என்பதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். என் மீது தற்கொலை தாக்குதல் நடத்த வந்த பெண்ணுடன் எனக்கு தொடர்பு இருந்தது எனக் கூறி பிரதியமைச்சர் எனக்கு மட்டுமல்ல, முழு இராணுவத்திற்கும் கறையை ஏற்படுத்தியுள்ளார் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com