இராவணன் தமிழனா அல்லது சிங்களவனா? இலங்கை ஒரு இந்து நாடா அல்லது பௌத்த நாடா? மேர்வின்-யோகேஸ் வாக்குவாதம்!
இராவணன் தமிழனா அல்லது சிங்களவனா? இலங்கை ஒரு இந்து நாடா அல்லது பௌத்த நாடா? ஏன அமைச்சர் மேர் வினுக்கும் த.தே.கூ மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்மிடையில் இன்று சபையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
த.தே.கூ. மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் இலங்கை ஒரு இந்து நாடு எனவும், சிவபக்தனான இராவணன் என்ற மன்னன் இலங்கையை ஆட்சிபுரிந்த ஒரு தமிழன் என்றும், தேவநம்பிய திஸ்ஸ மன்னன் இந்து மதத்தின் பால் ஈர்க்கப்பட்டு தனது மகன்மாருக்கு இந்து மதப் பெயர்களை சூட்டினார் என இதிகாசங்களை சுட்டிக்காட்டினார்.
இதனை முற்றாக மறுத்த அமைச்சர் மேர்வின், இதிகாசங்களையும் சுட்டிக்காட்டி இராவணன் ஒரு சிங்களவன் என்றும், இலங்கை பௌத்த நாடு என்றும், அதில் மாற்றங்களுக்கு இடமில்லை எனவும், மேலும் புத்தகங்கள் எதனையும் கூறமுடியாது அது வரலாறு ஆகிவிடாது. அதே போன்று இந்துப் பெண்களை திருமணம் முடித்தால் இந்த நாடு இந்து நாடாக மாறிவிடாது. வரலாறுகளை திசை திருப்புவதற்கு முயற்சிக்க வேண்டாம் என மேர்வின் சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வின் போது இந்த வாதபிரதிவதங்கள் இடம்பெற்றன.
0 comments :
Post a Comment