Tuesday, December 24, 2013

குடும்பக்கட்டுப்பாடு ஊசி ஏற்றிய இளம் குடும்பப் பெண் மரணம்: மூன்று மாத குழந்தை அவலம்

குடும்பக் கட்டுப்பாடு செய்த இளம் குடும்பப் பெண் கோமா நிலைக்குச் சென்று உயிரிழந்த சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கற்பிட்டி - வன்னிமுந்தலம் பகுதியில் வசிக்கும் மரிய சரோஜினி கோமஸ் (24 வயது) என்ற ஒரு பிள்ளையின் தாய் கற்பிட்டி வைத்திய அதிகாரியின் கற்பிட்டி அல் அக்ஷா சந்தியில் உள்ள தனியார் மருத்துவ நிலையத்தில் குடும்பக் கட்டுப்பாடு ஊசி ஏற்றுவதற்காக நேற்று மாலை சென்றுள்ளார்.

அங்கு குடும்ப கட்டுப்பாடு ஊசி ஏற்றிய பின்னர் கோமா நிலைக்குச் சென்ற பெண் கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த மூன்று மாத இளம் தாய் தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. இருப்பினும் இவ்வாறு இறந்தமை அப்பகுதி மக்களிடையே குழப்பத்தையும் வைத்திய அதிகாரி மீது சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

1 comment:

  1. The rich countries always test their medicines in poor countries. Our politicians and their business buddies make big profits from the import testing medical drugs.
    Very sad, for those greedy Mafias, the money is more value than the humanity.

    ReplyDelete