வடக்கு ஆளுநருக்கான அதிகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!!
அரசியலமைப்பிற்கமைவாகவும் 13 வது திருத்தச் சட்டத் திற்கமைவாகவும் மாகாண ஆளுநருக்கு வழங் கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடலொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தலைமையிலான இந்த கலந்துரையாடல் யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெற்றது.
வடமாகாண செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செய லாளர்கள், மாகாணத்திலுள்ள மாவட்ட செயலாளர்கள், திணைக்களங்களின் தலை வர்கள், பிரதேச செயலகர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள், கணக்காளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
அரசியலமைப்பில் ஆளுநருக்கு எத்தகைய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள என்பது தொடர்பில் வட மாகாண ஆளுநர் விளக்கமளித்தார். இதனை தொடர்ந்து கலந் துரையாடலில் கலந்து கொண்டவர்கள் தமதுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு உரிய விளக்கங்களை ஆளுநர் வழங்கினார்.
0 comments :
Post a Comment