சிறுவனை சிறுநீர் கழிக்க முடியாமல் செய்த வவுனியா அட்டமஸ்கட விகாராதிபதிக்கு விள்கமறியல் நீடிப்பு
வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவன் ஒருவனை துஸ்பிரயோகம் செய்து சிறுநீர் கழிக்க முடியாமல் செய்துள்ளதாக 12 வயது சிறுவன் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த மாதம் 6 ஆம் திகதி குறித்த சிறுவர் இல்ல காப்பாளரும் விகாராதிபதியுமான கல்யாணதிஸ்ஸ தேரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இவ் வழக்கு மீண்டும் 19 ஆம் திகதி விசாரணைக்கு வந்த போது குறித்த விகாராதிபதிக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் கடந்த 26 ஆம் திகதி மேலும் ஒரு சிறுவனும் நேற்றைய தினம் 5 சிறுவர்களும் அவ் விகாராதிபதிக்கு எதிராக துஸ்பிரயோகம் தொடர்பில் முறைப்பாடு செய்தனர். இந் நிலையில் இவ் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இவர் மீதான குற்றச் சாட்டுக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் இவரை தொடர்ந்து டிசம்பர் 17 வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment