செம்மண்ணோடையும் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் - எம்.எப்.எம். ரியாஸ்
நுழைவுப் பாதை
மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியின் கறுவாக்கேணி சந்தியிலிருந்து இடப்பக்கமாக திரும்பும்; கறுவாக்கேணி - மீராவோடை வீதியின் சுமார் 200 மீற்றர் தூரமும், மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியின் ஓட்டமாவடி தேசிய பாடசாலை சந்தியிலிருந்து இடப்பக்கமாக திரும்பும் MPCS வீதியின் ஊடாக சுமார் 300 மீற்றர் தூரமும்;; சென்றால் இக்கிராமத்தை அடைய முடியும்.
கிராமம் தொடர்பான அறிமுகம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதியில் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகம், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசசபை ஆகிய நிருவாகப் பிரிவுகளில் அமையப் பெற்றுள்ள கிராமமே செம்மண்ணோடை-208னு கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவாகும். வடக்கே மாடிச்சேனையும், கிழக்கே கறுவாக்கேணி, தெற்கே மாஞ்சோலை, கொண்டையன்கேணி, மேற்கே மீராவோடை, ஓட்டவாடி கிராம சேவகர் பிரிவுகளும் அமைந்து காணப்படுகின்றன.
இக்கிராமத்தின் வரலாறு 400 வருடங்களுக்கு முன்னர் அக்குறுனையிலிருந்து வயல் பிரதேசமான சின்ன அக்குறுனை /அக்குறானை என்றழைக்கப்பட்ட இடத்தில் குடியேறி வாழ்ந்தவர்கள் அன்றைய போக்குவரத்து, இன்னோரன்ன கலாச்சாரத் தேவைகளுக்காக குடிபெயர்ந்து பள்ளத்திட்டி-ஹிஜ்ரா நகர் (தற்போதயே பதுரியா நகர்);; மீராவோடை போன்ற கிராமங்களில் குடியமர்ந்தனர். அக்கிராமங்களிலிருந்து 1956ம் ஆண்டு கொளணித் திட்ட அடிப்படையில் காசான் காடுகளும, காட்டு மாமரங்களும், கள்ளி மரங்களும் நிறைந்து காடாக இருந்த இப்பிரிவினை சிரமதான அடிப்படையில் ஒரு பகுதியை சுத்தம் செய்து 20 மண் குடிசைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு 20 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டனர்.
இக்கிராமம் 'செம்மண்ணை' அதிகமாகக் கொண்டு காணப்பட்டதுடன் 'நீண்ட பெரிய ஓடைகள் இக்கிராமத்தை ஊடறுத்துச் சென்றதால் ' இக் கிராமம் 'செம்மண்ணோடை' என அழைக்கப்படுகிறது. தற்போது இக்கிராமத்தில் 1406 குடும்பங்களும் 2436 வாக்காளர்களும் மொத்த சனத்தொகை சுமார் 4005 ஆகவும் உள்ளன.
இங்கே பிரசித்தமான இடங்களாக கிராம அபிவிருத்திச் சங்கம்-1960. 'ஐpந்தாபாத் பள்ளி அல்லது சிறிலங்கா பள்ளி' (அரசியல் சவாலொன்றின் நிமித்தம் உருவாக்கப்பட்ட பள்ளிவாயல்) என்றழைக்கப்படும்; 'பாரி ஐ{ம்மாப் பள்ளிவாயல்' -1974, செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயம்-1976, அல் மத்ரஸத்துல் ஸக்கிய்யா குர்ஆன் பாடசாலை-1980, அல் மத்ரஸதுல் றிஸ்வியா குர்ஆன் பாடசாலை-1981, குபா ஐ{ம்ஆ பள்ளிவாயல்-1986, தக்வா ஐ{ம்மா பள்ளிவாயல்-1993, சாட்டோ விளையாட்டுக் கழகம்-1990, சாட்டோ இளைஞர் கழுகம்-1994, சாட்டோ ரோஸ் முன்பள்ளி-1995, சாட்டோ விளையாட்டு மைதானம்-1995, கோட்டாமில் என்றழைக்கப்படும் அரிசி ஆலை, மர அரியாலைகள், பாத்திமா ஸஹ்றா பெண்கள் அரபுக் கல்லூரி-1997, சிம்சிறிலங்கா சர்வதேச ஆங்கிலப்பாலர் பாடசாலை-2006, என்பன பிரசித்த இடங்களும் அமைப்புக்களுமாகும்.
செம்மண்ணோடை கிராமம் கடந்த கால (1985, 1990, 2002 ஆண்டுகளில்) வன்செயல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டது. தொடர்ச்சியாக செம்மண்ணோடை கிராம மக்கள் நிகழ்ந்த யுத்தத்தினால் வெகுவாக பாதிக்கப்பட்டனர். யுத்தம் அதன் கொடிய கரங்களை கிராமத்தின் சமூக, பொருளாகார தளங்களை நோக்கி நீட்டியழித்ததுடன் மக்களின் வாழ்வியல் அடையாளங்களையும் வேறோடு பிடுங்கி விட்டது.
பிரச்சனை – 01
கடந்த 1990ம், 1991ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பயங்கரவாத மற்றும் இனப்பிரச்சனைகளின் போது அன்றைய மொத்த 484 குடும்பங்களும் செம்மண்ணோடைக் கிராமத்தை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்தனர். 2009ம் ஆண்டு இறுதிப்பகுதியிலிருந்து மீளக்குடியேறியுள்ளனர். தற்போது இப்பிரதேசத்தில் பிரதான பிரச்சனையாக வீதிகள் அமைக்கப்படாமை, மின்இணைப்பின்மை, வீடு மலசல கூடம் இல்லாப்பிரச்சினை, குடிநீர் வசதியின்மை, வாழ்தாரம் மற்றும் தொழில்வாய்ப்புக்கள் இல்லாப்பிரச்சினை, குடியிருப்புக்காணிப்பிரச்சினைகள், மைதான அபிவிருத்திகளின்மை, வடிகாண்களுக்கான மூடியின்மை, இன்னபிர பல்வேறுபட்ட பிரச்சினைகளோடு இம்மக்கள் பல துயரங்களை எதிர்நோக்குகின்றனர்.
செம்மண்ணோடைக் கிராமத்தின் அன்றைய தோட்டங்களின் பின்னணி
01. வடக்கு:-
ஓட்டமாவடி மம்மலி மரைக்கார் என்பவரின் தோட்டம் அதனை கரடி கடித்து மரணித்த வாழைச்சேனை அப்பா என்றழைக்கப்பட்ட மீராலெப்பை முகம்மது இஸ்மாயில் அவர்களுக்குச் சொந்தமான செம்மண்ணோடை வடக்கே ஏழு ஏக்கர் தோட்டம் இருந்தது.
02 கிழக்கு:-
ஓட்டமாவடி எம்.கே.ஏ.அகமட் முகைதீன் ஹாஐpயாரின் 22 ஏக்கர் பங்களாவடி தென்னந் தோட்டம் என்றழைக்கப்படுகின்றது.
03. தெற்கு:-
காத்தான்குடியைச் சேர்;ந்த கொச்சிக்காய் ஆலிமுட தோட்டம் என்று குறிப்பிடுகின்றனர்.
04. மேற்கு:-
அன்றைய காணி அதிகாரி எஸ். தம்பிப்புள்ள ஓவிசர்ர தோட்டம் எனவும் குறிப்பிடுகின்றனர்.
05. மத்தி:-
அரச காணிகள் என்று மக்கள் குடியேறிய காணிகள் (ஆரம்பத்தில் மேற்குறிப்பிடப்பட்ட தோட்டங்களும் அரச காணிகளை குத்தகை அடிப்படையில் தங்களுக்கு சொந்தகாக்கிக் கொண்டதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்)
செம்மண்ணோடைக் கிராமத்தின் நீண்ட பெரிய ஓடைகள்
01. தற்போதைய ஏ - 1 வடிகால் மாவடிச்சேனையிலிருந்து செம்மண்ணோடை ஊடாக செம்மண்ணோடை, மாஞ்சோலை பிரதான ஓடையில் விழும் ஓடையே செம்மண்ணோடையின் நீண்ட பெரிய ஓடையாகும். (அன்றைய கபீப் கங்காணியாரின் அருகாமையில் வரும் ஓடை)
02. தற்போதைய ஏ - 2 வடிகால் மாவடிச்சேனை இலங்கை மின்சார சபைக்குப் பின்னாலிருந்து செம்மண்ணோடை தக்வா ஐ{ம்ஆப் பள்ளிவாயல் வீதி ஊடாக செம்மண்ணோட,மாஞ்சோலை பிரதான ஓடையின் கொண்டையங்கேணி வடிச்சலில் விழும் ஓடையே இரண்டாவது பெரிய ஓடையாகும்.
03. மாவடிச்சேனை அகமட் கிராஸ் வீதியின் அருகாமையில் இருந்து செம்மண்ணோடை கொமைனி முஸ்தபாவின் மரஅரியாலை மற்றும் 22வது பொலிஸ் பாதுகாப்பு அரண்; அமைந்திருந்த இடத்தின் ஊடாக கொண்டையங்கேணி வடிச்சலில் விழும் ஓடையே செம்மண்ணோடையின் 3வது ஓடையாகும்.
04. மாவடிச்சேனை விவசாய கமநல சேவை நிலையத்தினூடாக செம்மண்ணோடை கறுவாக்கேணி எல்லை ஊடாக கொண்டயன்கேணி வடிச்சலில் விழும் ஓடை நான்காவது ஓடையாகும்.
05. மாவடிச்சேனை நீர்ப்பாசன அலுவலகத்திலிருந்து ஹிஸ்புல்லாஹ் வீதி ஊடாக ஊடறுத்து ஏ-1 வடிகாலில் விலும் ஓடை ஐந்தாவது ஓடையாகும்.
பிரச்சனை – 02
1. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கிய கிராண்ட் தற்போது உறுதிக் காணிகள் 1985ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தமிழ் அரச நிருவாகிகளால் ஆ;க்கிரமிக்கப்பட்டு தமிழ்மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, மீதிக்காணிகளில் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றனர்.
2. வடிகாண்களுக்கு விடப்பட்ட இடங்கள் மக்களால் ஆக்கிரமிக்கபட்டு வெள்ள காலங்;களில் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
ஆரம்பக் குடியிருப்பாளர்களின் விபரம்
1. அன்றைய காழியார் அப்துல்லாஹ் முஹம்மது காசிம் மௌலானா
2. முன்னால் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.ஏ.கபூர் அவர்களின் குடும்பம் மீராலெப்பை இஸ்மாலெப்பை (கோதாரியார்)
3. பீர் முஹம்மட் மௌலவியின் குடும்பம் செய்லார் அப்பா என்றழைக்கப்படும் அஹமது லெப்பை மீராலெப்பை
4. லெத்தீப் ஹாஜியாரின் குடும்பம் முஹம்மது தம்பி உமர்லெப்பை
5. அலியார் ஹாஜியாரின் குடும்பம் யூசுப்லெப்பை அஹமது லெப்பை
6. தங்கச்சிம்மா அல்லது கொழுந்துடம்மா என்றழைக்கப்படும் நாசர்லெவ்வை கதீஜா உம்மா தற்Nபுhது எம்.ரீ.அப்துல்ரகுமான மௌலவியின் குடும்ப வளவு ,காட்டுமாமரத்தடி வளவு
7. இந்தியக்காரர் பிச்சைத்தம்பி உமர்லெவ்வை கொழுந்தும்மா தற்போது ஆபிதா ஆசிரியைiயின் தாயின் வளவு.
8. இஸ்மாலெப்பை சீனி முஹம்மது வெள்ளையர் மாமாவின் வாப்பா
9. கொந்துராத்துக்காரர் உதுமாலெப்பை என்றழைக்கப்படும் இஸ்மாலெப்பை உதுமாலெப்பை
10. ஆதம்பாவா பள்ளித்தம்பி (ஆமினா உம்மாவின் தந்தை)
11. தோல்பட்டியர் என்றழைக்கப்படும் இஸ்மாலெப்பை உதுமாலெப்பை
12. ஆதம்லெப்பை ஓடாவியாரின் குடும்பம், ஆதம்லெப்பை சீனி முஹம்மது
13. கணக்குப்புள்ளட மதினியா ஆதம்பாவா செய்னம்பு
14. மரைக்கார் முஸ்தபாலெவ்வை (உமர்லெவ்வை அவ்வா உம்மா)
15. முஹம்மது உசனார் கலந்தர் உம்மா (மீராலெப்பை அப்பா)
16. மட்டைக்காரர் ஈஸாலெப்பை என்றழைக்கப்படும் சரீப்லெப்பை ஈஸா லெப்பை
17. முத்தும்மாட உம்மா முஹம்மது உசனார் பாத்தும்மா
18. கப்புவர்ர குடும்பம் காசிம்பாவா நூஹூலெப்பை
19. லாமண்ணக்காரர் என்றழைக்கப்படும் ஐத்துரூஸ் அச்சி முஹம்மது
20. செவிட்டுச்சீனியர் குடும்பம் காசிம்பாவா அவ்வா உம்மா
21. மாராயத்தர் குடும்பம் காசிம்பாவா மரியம் பீவி
22. உதுமாலெப்பை மாஸ்டர்ர குடும்பம் உதுமாலெப்பை அஹமதுலெப்பை (அலிமாக்கண்டு)
23. தம்பிக்கண்டு ஆலிம் குடும்பம் முஹம்மது சுல்தார் சாலிஹா உம்மா
24. நெடிய மீரார் என்றழைக்கப்படும் சுலைமாலெப்பை மீராமுகைதீன்
25. எம் பீ முஸ்தபா. என்றழைக்கப்படும் முகைதீன்பாவா முஸ்தபா
26. ஓவிசரு என்றழைக்கப்படும் முஹம்மது தம்பி அஹமது லெப்பை
27. கழுவன்கேணியரின் குடும்பம் காரிசாப்பிள்ளை சேகு உம்மா
28. பிறுதாவர் இலவாசியார், எம் ஜீ ஆர் குடும்பம். மகுமூதுலெப்பை ஆதம்லெப்பை
29. அரபி உசனார் என்றழைக்கப்படும் அஹமது லெவ்வை உசனார்.
30. அல்லாப்பிச்சை ஹயாத்தும்மா, (சலீம்ட மூத்தம்மா)
31. பால்கார பெத்தா என்றழைக்கப்படும் மீராலெப்பை செய்னம்பு (இப்றாஹிம் மாமாட உம்மா)
32. செய்னீயர் குடும்பம் மீராலெப்பை ஆசியா உம்மா
33. தொட்டுஞ்சில்கார அச்சியர்ர குடும்பம் அஹமது லெவ்வை அச்சி முஹம்மது
34. கொழும்பார்ர குடும்பம், முஹம்மது தம்பி உமர்லெப்பை
35. பார்ர உம்மா குடும்பம், அஹமது முகைதீன் சீனி முஹம்மது
36. கெட்டர் குடும்பம், முகைதீன்பாவா அலியார்,
37. செவிட்டுச்சீனியர்ர தங்கச்சி தற்போதைய ஆர்.டீ.எஸ். வளவு சுலைமாலெப்பை நாகூர் உம்மா
38. போய்லையர்ர மருமகன் இப்றாலெப்பை (சாத்திரியார்ர ஊமைப்புள்ளட வளவு)
39. அஹமது லெப்பை உமர் லெப்பை (உதுமாலெப்பையின் குடும்பம்)
40. முஹம்மது உசனார் ஆசியா உம்மா (சுக்கர் குடும்பம்)
41. பக்கீர் தம்பி சேகுமுஹம்மது (நிசார்தீன் குடும்பம்)
42. சுக்கர் முஹம்மது உசனார்.
43. பையன்னா என்றழைக்கப்படும் பக்கீர் முகைதீன்
44. 1957 மீராசாஹிப் ரம்ழார் (காமிதுலெவ்வை ஆசியா உம்மா)
45. 1958 போச்சாலி ராத்தா அலியார் சாலியா உம்மா
46. 1959 பக்கீர் தம்பி மைமுனாச்சி (அசனார் அலியார்)
47. 1959 நேந்த ஓடாவியார்ர குடும்பம் ஆதம்பாவா முஸ்தபா லெப்பை (கம்புக்காரர் ரம்ழார் குடும்பம்)
48. 1961 அஹமது லெவ்வை இஸ்மாலெப்பை (உப்பர்ர வாப்பா இஸ்மாலெப்பை)
49. 1961 சாஸ்த்தியார் என்றழைக்கப்படும் சதக்குலெப்பை அலியார்.
50. 1966 எம்.எல்.எம்.சிஹாப்தீன் ஆலிம்
51. 1969 இஸ்மாயில் மாஸ்டர்
பிரச்சினை 03
1. அரை ஏக்கர் திட்டத்தின் கீழ் குடியேறியவர்கள் தற்போதும் தங்களுடைய காணிகளுக்கான தனியார் மயமாக்கள் திட்டத்தை மேற்கொள்ளாமை.
அரசாங்கமும், அரசும் துரிதகதியில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்குமா?
(நன்றி- வை.எல்.மன்சூர்)
0 comments :
Post a Comment