தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை கண்டித்து கிழக்கு பல்கலைக்கழக சமூகம் இன்று எதிர்ப்பு ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக் களப்பு வந்தாறுமூளை வளாகத்திற்கு முன்பாக நடாத்தப் பட்ட இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை கண்டித்து துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. கடந்த 30 வருட காலமாக போர் சூழலினால் பாதிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் தற்போது படிப்படியாக அபிவிருத்தி கண்டு வருகின்றது.
இந்நிலையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஊழல் இடம்பெறுவதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு சிலர் வெளியிட்டு வருகின்றனர். இச்செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக பல்கலைக்கழக சமூகம் சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment