நெல்சன் மண்டேலாவின் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் தவறான சைகைகளை காட்டிய நபரால் சர்ச்சை!
ஜொஹன்னஸ் பேர்க் நகரில் அமைந்துள்ள எப்.என்.பி. மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா வுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பல உலக நாட்டு தலைவர்கள் தமது இரங்கல் உரைகளை நிகழ்த்திய போது அதே மேடையில் இருந்தபடி சைகை மொழியால் விளக்கிய நபர் உபயோகப்படுத்திய சைகைகள் முற்றி லும் தவறானவை என புதிய சர்ச்சையொன்று ஏற்பட் டுள்ளது.
நெல்சன் மண்டேலாவின் நினைவஞ்சலிக் கூட்டத்தில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உட்டப பல தலைவர்களின் உரைகளை, அதே மேடையில் இருந்தபடி சைகை மொழியால் விளக்கிய நபர் உபயோகப்படுத்திய சைகைகள் தவாறானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காது கேட்காத பல நபர்கள், இந்தச் சைகை மொழியானது அங்கீகரிக்கப்பட்ட வடிவில் இல்லை என்றும், சில சமயங்களில் அது அர்த்தமற்றதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். உலகில் உள்ள காது கேளாதோர் சங்கங்களால் பயன்படுத்தப் படாத பல சைகைகளை, சைகை மொழி பெயர்பாளர் உபயோகப்படுத்தியதாக தென் ஆபிரிக்க காது கேளாதோர் சங்கத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment