Saturday, December 21, 2013

இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி அழைப்பு

இலங்கை இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை ஊடாகவே தீர்வு காணமுடியும். உலக நாடுகளுக்கு முன்மாதிரியான தீர்வு ஒன்றினை பெற்றுக் கொள்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்டம் தொடர்பான வாக்கெடுப்பு நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவடைந்த நிலையில் எமது நாடு இன்று பல துறைகளிலும் வளர்ச்சியடைந்து வருகின்றது. எமது உள்நாட்டு இனப்பிரச்சனைக்கு வெளிநாடுகளுக்கு போறதால் எந்த பயனும் இல்லை. நாம் அனைவரும் இணைந்து எமது பிரச்சனைக்கு தீர்வு கண்டு உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு இந்த வரவு செலவுத் திட்டம் கொண்டு வருகின்ற இந்த நிலையில் அழைப்பு விடுகின்றேன். வடமாகாண சபை நிறுவப்பட்டதன் மூலம் நாம் இணைந்து பணியாற்றக் கூடிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளோம் என்றார்.

இதேவேளை, இனப்பிரச்சனை தீர்வு திட்ட விடயத்தில் அரசில் நம்பிக்கை இல்லை எனக் கூறி கூட்டமைப்பு இழுத்தடிப்பு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. " அந்த தவராசா எந்த ஒரு இயக்கத்தையும் சேர்ந்தவரல்ல. முற்றுமுழுதாக மனிதாபிமான அடிப்படையிலேயே தனது ஊரைச் சேர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களுக்கு உதவுவதற்காகச் சென்றார். சில வேளைகளில் இப்படியான ஒரு சூழல் தனது ஊரைச் சேர்ந்த புலி இயக்க உறுப்பினர்களுக்கு ஏற்பட்டிருந்தாலும் கூட, அவர் உதவச் சென்றிருக்கக்கூடும். இந்த மாதிரியான நேரங்களில் மனிதனிடம் இருக்கும் இயல்பான குணங்களான அன்பு, இரக்கம், மனிதாபிமானம் விழித்துக் கொள்ளும் போது, அவர்கள் சம்பந்தப்பட்டவர்களின் பின்னணியைப் பார்க்காது உதவி செய்ய விரைவர். அது இந்தப் பாசிசப் புலிகளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. " நன்றி மணி அன்னை

    ஆனால் தற்போது சுகு , ரத்தினம் போன்றோர் புலி கூட்டமைப்புடன் கூடி குழாவுகின்றார்கள் , இப்படியானவர்களின் பிறப்பை சந்தேகிக்க வேண்டி உள்ளது, இவர்கள் இனியாவது தங்கள் தவறி திருத்தி கொள்ள வேண்டும்.

    ReplyDelete