அவுஸ்திரேலியாவில் முதன் முதலாக ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் !!(வீடியோ)
அவுஸ்திரேலியாவில் முதன் முதலாக் ஓரினச்சேர்க்கை யாளர் (ஆணுக்கும் ஆணுக்கும்) திருமணம் நேற்று நடந்துள் ளது. ஓரின பிரியர்கள் திருமணம் செய்ய அனுமதித்து புதிய சட்டம் அமலுக்கு வந்த சில வினாடிகளில் இந்த திருமணம் கான்பெர்ரா நகரில் நடந்துள்ளது.ஓரினச்சேர்க்கை பிரியர்க ளின் கூட்டமைப்பு தலைவர் ரோட்னி க்ரூம் வெள்ளிக் கிழமை நள்ளிரவு சட்டம் அமலானதும் அடுத்த சில விநாடி களில் ஆணுடன் ஆண் ஓரின திருமணத்தை நடத்தி வைத் தார்.
இவர்களை போல 46 ஜோடிகள் இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் செய்ய உள்ளனர்.இது குறித்து ரோட்னி க்ரூம் கூறுகையில், அவுஸ்திரேலியா இந்த சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் ஓரினச் சேர்க்கை திருமணத்தை அனுமதி க்கும் நாடுகளுடன் சேர்ந்து விட்டது மகிழ்ச்சியான ஒன்று என்று கூறியுள் ளார்.இதற்கிடையில் மத மற்றும் பிற்போக்குவாத அமைப்பினர் சேர்ந்து இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
1 comments :
Nature cannot be challenged by the humans.Part of the world is on the reverse gear without any destination or idea
Post a Comment