வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடித்தால் கொலை செய்வேன்! உப தலைவரை அச்சுறுத்துகிறார் தலைவர்!
நேற்று முன்தினம் 2014 ஆம் ஆண்டுக்காக முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் தோற்ற வத்தளை பிரதேசயின் தலைவர் தனக்குத் தொலைபேசி மூலம் மரண அச்சுறுத்தல் விடுத்தாக, உபதலைவர் சஞ்ஜீவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இரண்டாவது முறை வரவு செலவுத் திட்டத்தில் தோற்கடிக்கச் செய்தால் கொலை செய்துவிடுவதாகக் அப்பிரதேச சபையின்தலைவர் தியாகரத்ன அல்விஸ் தனக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்தார் எனும் கூற்றை, வத்தளை பிரதேச சபையின் தலைவர் தியாகரத்ன அல்விஸ் மறுத்துரைத்துள்ளார்.
சென்ற 04 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட வத்தளை பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தி ற்கு எதிராக 11 வாக்குகளும், ஆதரவாக 11 வாக்களும் வழங்கப்பட்டிருந்தன. அதனால் வரவு – செலவுத் திட்டம் தோல்வியைத் தழுவியது. அவ்வமயம் ஆளும் கட்சியைச் சேர்ந்த மூவர் வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(கேஎப்)
0 comments :
Post a Comment