யாழ்.மாநகர சபையில் பணியாற்றிய தொண்டர்களுக்கு சேவைக் கால அடிப்படையில் கல்வித் தகைமையின் இறுக்கம் தளர்த்தப்பட்டு நிரந்தர ஊழியர்களாக உள்வாங்கப் படுவார்கள் என மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் இன்று (23.12.2013) தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் " யாழ்.மாநகர சபையில் 150 பணியாளர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இன்று திங்கட்கிழமை நேர்முகத்தேர்வு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதுன் இதற்காக பத்திரிகைகளில் மாநகர சபையால் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்ததுடன் அந்த விளம்பரங்களில் கல்விப் பொதுத்தராதரப் பரீட்சை சித்தி பெற்றவர்கள் உள்வாங்கப்படுவார்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது .
இந்தநிலையில் ஏற்கனவே யாழ்.மாநகர சபையில் தற்காலிக சுகாதாரத் தொண்டர்களாக உள்ளவர்கள் தம்மை நிரந்தர நியமனம் செய்யக்கோரி போராட்டம் நடத்தியிருந்த நிலையில் தற்போது வளங்கத்தயாரான புதிய நியமனங்கள் தாங்களுக்கு இல்லாமல் வெளிநபருக்கு வழங்கப்படவுள்ளதாக கருதி இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இருந்தும் மாகாண ஆளுநரின் அதிகாரத்தின் மூலம் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் எதிர்பார்த்த கல்வித் தகைமையினை விட குறைந்த கல்வித்தகைமை உடையவர்களையும் உள்வாங்குவதாக தீர்மானித்திருந்தோம் எனினும் இது தொடர்பாக அறிந்திராத சுகாதாரத் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட முனைந்தாக மாநக ஆணையாளர் குறிப்பிட்டார்.
மேலும் போராடம் நடந்த இடத்திற்கு வருகைதந்த யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தற்காலிக தொண்டர்களாக உள்ளவர்களுக்கும் சேவைக் கால அடிப்படையில் நியமனம் வழங்கப்படும் என தெரிவித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
எனினும் இன்று ( 23.12.2013 ) நடைபெறவிருந்த சுகாதாரத் தொண்டர்களுக்கான நேர்முகத்தேர்வுக்கு பங்குபற்ற வேண்டி இருந்தவரகள் போராட்டத்தில் ஈடுபட்டமையினால் பிறிதொரு நாளில் நேர்முகத் தேர்வு நடைபெறுமென மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment