Thursday, December 26, 2013

பாலியல் இலஞ்சம்! பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!

பாலியல் இலஞ்சம் பெறமுயன்ற மகவ குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று முற்பகல் குருநாகல் பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மகவ பிரதேசத்திலுள்ள 29 வயதான பெண் ஒருவரிடம் மகவ குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி பாலியல் லஞ்சம் பெற முயன்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment