சிங்களக் கொடியினை வீழ்த்தி தமிழீழக் கொடியினை பறக்க விடும் த.தே.கூ வின் முயற்சி உக்கிரம் - விமல்
வடக்கில் சிங்களக் கொடியினை வீழ்த்தி, தமிழீழக் கொடி யினை பறக்க விடும் முயற்சியிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சர்வதேசத்துடன் இணைந்து செயற்படு கின்றனர் எனவும், எல்.ரி.ரி.ஈ யை அழித்தமைக்காகவே சம்பந்தன் அரசாங்கத்தை பழிவாங்க நினைக்கின்றார் என தேசிய சுந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு தூக்குக் கயிற்றினை மாட்டவே கூட்டமை ப்பினர் செயற்படுகின்றனர் என தேசிய சுந்திர விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
வெகுவிரைவில் அரசாங்கம் இனியாவது பிரிவினைவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து சிங்கள நாட்டினைக் காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் தேசிய சுதந்திர முன்னணியினால் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார்.
0 comments :
Post a Comment