"தமிழர்" என்ற சொல்லை நீக்கிவிட்டு பிரேரணையை சமர்பிப்போம்- விக்கினேஸ்வரன்
"சிவில் சமூகத்தை சார்ந்தவரும் மனித உரிமைகள் தொடர்பான பூரண அறிவுடையவருமான ஒருவரே வட மாகாண அளுநராக நியமிக்கப்பட வேண்டும்"
நேற்று நடைபெற்ற வடமாகாண சபையின் மாதாந்த அமர் வின் போது சிவில் சமூகத்தை சார்ந்தவரும் மனித உரி மைகள் தொடர்பான பூரண அறிவுடையவரு மான ஒருவரே வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என தீர் மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் போதே ஜனாதிபதிக்கு முன்வைக்கப்பட்டிருந்த பிரேரணை சபை உறுப்பின ர்களினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. சிவில் சமூகத்தைச் சேர்ந்த வட மாகாண தமிழர் ஒருவரே ஆளுநராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் பரிந்துரை க்கப்பட வேண்டும் என்ற பிரேரணையொன்றை மாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் சபையில் முன்வைத்தார்.
இந்த பிரேரணையை ஆறுமுகம் கந்தையா சர்வேஸ்வரன் வழிமொழிந்தார். எனினும் இந்த பிரேரணையில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு எதிர்க்கட்சி உறுப்பினர் செனவிரத்ன ஏ. டி. தர்மபாலா வேண்டுகோள் விடுத்தார்.
இதனையடுத்து குறித்த பிரேரணையிலுள்ள 'தமிழர்' என்ற சொல்லை நீக்குமாறு முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழர் என்ற சொல் வேண் டாம் என்றால் வட மாகாணத்தை, சேர்ந்த ஒருவர் என்பதையும் நீக்க வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் தெரிவித்தார்.
இறுதியாக "சிவில் சமூகத்தை சார்ந்தவரும் மனித உரிமைகள் தொடர்பான பூரண அறிவுடையவருமான ஒருவரே வட மாகாண அளுநராக நியமிக்கப்பட வேண்டும்" என்ற பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது. இது அனைத்து உறுப்பினர் களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து ஏகமனதாக சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் வடக்கில் இராணுவத்தை அகற்றி சிவில் சமூகம் உருவாக்கப்பட வேண்டுமென்ற பிரேரணையும் மாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங் கத்தினால் முன்வைக்கப்பட்டது. இதனை மாகாண சபை உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் வழிமொழிந்தார். இப்பிரேரணையும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
0 comments :
Post a Comment