Wednesday, December 18, 2013

நான்கு இளைஞர்களுடன் தொடர்பான பெண் தனது கணவன் ஒருவரை கொலை செய்து மலசலகூட குழியில் போட்டு மூடிய சம்பவம் வவுனியாவில்..

வவுனியா மெனிக்பாம் மூன்றாம் யூனிட் பகுதியில் உள்ள வீடொன்றின் மலசலக்குழியில் இருந்து ஆணொருவரின் சடல எச்சங்கள் நேற்று (17.12) செட்டிகுளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அச்சடல எச்சங்கள் மனைவியால் கொலை செய்யப்பட்ட கணவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,

சம்பவம் இடம்பெற்ற வீட்டில் நீண்ட நாட்களாக வீட்டில் வசித்து வந்த பெண் மற்றும் அவரது கணவன் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லாததோடு வீடும் பூட்டப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புலனாய்வாளர்கள் விசாரணைகளை மேற்கொண்ட போது அயலவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் துர்நாற்றம் வீசிய சம்பவம் தொடர்பிலும் தெரிவித்ததை அடுத்து பெரும் குற்றத்தடுப்பு பிரிவை சேர்ந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எம். சோமரட்ண தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வீட்டு உரிமையாளரான பெண்ணை கடந்த 15 ஆம் திகதி கைது செய்ததுடன் சம்பவம் தெடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந் நிலையில் மேற்படி பெண் கொடுத்த வாக்கு மூலத்தில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன. எனக்கு நான்கு பேருடன் தொடர்பு உள்ளது. கடந்த 2011. 11.09 அன்று இரவு குறித்த வீட்டில் என்னுடன் இருந்த முனியாண்டி துரைச்சாமி ஆகிய எனது கணவருக்கும் எனக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கணவன் வைத்திருந்த கோடரியை பறித்து கணவனை தாக்கியதால் கணவன் உயிரிழந்ததாகவும் அதன் பின்னர் மலசலக்குழியில் சடலத்தை போட்டு மூடியதாகவும் செட்டிகுளம் பொலிஸாருக்கு மனைவி வசந்தகுமாரி வாக்குமூலம் அளித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந் நிலையில் நேற்று சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற வவுனியா நீதிவான் ஏ.சி. ரிஸ்வான் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மலசலகுழியை உடைக்குமாறு பணித்து அதற்குள் உள்ள பொருட்கள் மனித உடல் எச்சங்களை பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு பணித்திருந்தார்.

இதனடிப்படையில் கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com