Monday, December 9, 2013

பிரதமரைக் கைது செய்யுமாறு கோருகிறது ஜாதிக ஹெல உறுமய!

பிரதமர் டி.எம். ஜயரட்னவைக் கைது செய்யுமாறு ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பிரதமர் ஜயரட்ன பதவியை துறக்க வேண்டும் அல்லது கைது செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 131 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் அடங்கிய கொள்கலனை விடுவிப்பதற்கு பிரதமர் அலுவலகத்தினால் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடிதத்தை எழுதிய நபர்கள் பற்றிய தகவல்களை பிரதமர் வெளியிடத் தவறினால் அவரை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. கொள்கலனை விடுவிப்பதற்கு முயற்சித்த அதிகாரிகள் பற்றிய தகவல்களை அம்பலப்படுத்த வேண்டியது பிரதமரின் கடமையாகும் என ஜாதிக ஹெல உறுமயவின் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பௌத்த மதத்தை அழிக்கும் பிரதான மையமாக பௌத்த சாசன அமைச்சு செயற்பட்டு வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றவாளிகளை பாதுகாக்க பிரதமர் முயற்சிக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சித்தால் அவரை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com