கீதாவுக்கும் அஜித்திற்குமிடையே போர்...! நான் யசூசி அகாஷியாய்!! - சமித்த தேரர்
தென் மாகாண சபை உறுப்பினர் அஜித் பிரசன்னவும் பெந்தர எல்பிடிய அமைப்பாளர் கீதா குமாரசிங்கவுக்கு மிடையே நடைபெறுகின்ற போரில் தான் விசேட சமா தானப் பேச்சாளரான யசூசி அகாஷி போன்று பணிபுரிவதாக தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் குறிப்பிடுகிறார்.
“கிதா குமாரசிங்க, அஜித் பிரசன்ன உட்பட மாகாண சபை உறுப்பினர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தானே யசூசி அகாஷி போன்று கடமையாற்றுகிறேன்.
மாகாண சபை உறுப்பினர்களை உண்ணாவிரதத்தில் இருக்காதிருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி எனக்குச் சொன்னார்.
நான் பிரச்சினைகளை தீர்த்தேனே தவிர, பெண்களின் பிரச்சினைகளைத் தீர்க்கச் செல்லவில்லை. கீதாவை சந்திக்கவும் இல்லை” எனவும் தேரர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment