Tuesday, December 17, 2013

கொண்டம் சிறிதரன் ரொம்ப உணர்ச்சிவசப்படுகிறார்: அவரது பேச்சில் எந்த பிரயோசனமும் இல்லை என்கிறார் சி.வி.விக்கினேஸ்வரன்

சிறிதரனுக்கு அறிவு இல்லை. அவர் உணர்ச்சிவசப்படுபவர். அப்படி கதைப்பதால் என்ற பயனும் இல்லை என வடமாகாண முதலமைச்சர் தென்மராட்சி கல்வி வலயம் நடாத்திய முழுநிலா நாள் கலைவிழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (16) இடம்பெற்ற இந் நிகழ்வில் கலந்து கொண்ட யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கொண்டம் சிறிதரன் அங்கு உரையாற்றும் போது, கிளிநொச்சியில் பல்லாயிரம் விவசாயிகள் தண்ணீருக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் வட மாகாண முதலமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் எனத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், வடமாகாண முதலமைச்சர் கேட்பது இரணைமடுத் தண்ணீரை. அவர் தாகமாக இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். இரணைமடுக் குளம் 34 அடி நீரைக் கொண்டது. ஆனால் மேலதிக இரண்டு அடி நீரைக் கூட்டி அதனைத் தான் தாங்கள் கொண்டு செல்வதாக கொண்டு செல்பவர்கள் சொல்கிறார்கள்.

கிளிநொச்சியில் 34 ஆயிரம் ஏக்கருக்கு நீர் தேவை இருக்கிறது. ஆனால் எண்ணாயிரம் ஏக்கருக்கு மட்டுமே நீர்பாய்ச்ச முடிகிறது. அந்த எண்ணாயிரம் ஏக்கரை 16 ஆயிரம் ஏக்கராக மாற்ற முடியுமா? என விவசாயிகள் கேட்கிறார்கள். மேலதிக நீர் என்பது 34 ஆயிரம் ஏக்கருக்கு காலபோகம், சிறுபோகம் ஆகியவற்றுக்கு நீர் வழங்கிய பின்னர் இருப்பது. இங்கு மீதம் இல்லை. அவ்வாறு மீதமிருந்தால் கொடுக்கலாம்.

இரணைமடுக் குளத்தில் தற்போது 34 அடி தண்ணீர் இருக்க வேண்டும். ஆனால், இப்போது 12 அடி தண்ணீர் தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது எங்கே இருக்கிறது மேலதிக நீர்´ என கேள்வியும் எழுப்பியதுடனக் முதலமைச்சரை கிண்டல் அடிப்பது போன்ற பாணியில் பேசியுள்ளார். கொண்டம் சிறிதரன் இவ்வாறு பேசியபோதும் சபையில் கைதட்டல்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஏனெனில் தான் பேசும் போது கைதட்டுவதற்காக கூட்டிக் கொண்டு வருபவர்களை நேற்றைய தினம் சிறிதரன் கூட்டிக் கொண்டு வரவில்லையாம்.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அதற்கு இவ்வாறு பதிலளித்துப் பேசினார்.

செயற்திட்டங்கள் பற்றிப் பேசும் போது உணர்ச்சி வயப்படுவதில் பிரயோசனம் இல்லை. அது உள்ளத்திலிருந்து வரவேண்டும். அறிவு பூர்வமாக இந்தச் செயற்திட்டம் வடமாகாண மக்களுக்கு நன்மை பயக்கிறதா? என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும். அப்படிப்பட்ட விடயத்தை நாங்கள் பேசி ஆராய்ந்த பின்னர் தான் நான் தம்பியிடம், நீங்கள் தண்ணீர் கொண்டு வருவீர்களா? இல்லையா? என்று கேட்டேன்.

இரணைமடுக் குளத்தில் 12 அடி தண்ணீர் இருந்தால் அதை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை. 32 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே அது யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்படும். எனவும் முதலமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். சிலதை அறிவு பூர்வமாகவும் யாதார்த்தமாகவும் சிந்தித்து கதைக்க வேண்டும். சிறிதரன் ரொம்ப உணர்ச்சி வசப்படுகிறார். அதால தான் அப்படி பேசுறார். மற்றப்படி ஒன்றும் இல்லை என்றார்.

இந்த நிகழ்விற்கு இவர்களோடு, வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன், சாவகச்சேரி நகராட்சி மன்றத்தலைவர் இ.தேவசகாயம்பிள்ளை, தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் சு.கிருஷ்ணகுமார் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

1 comments :

Anonymous ,  December 17, 2013 at 3:11 AM  

அறிவு பூர்வமாகவும் யாதார்த்தமாகவும் சிந்தித்து கதைக்க வேண்டும். சிந்தித்து செயல் படவேண்டும்!
அதுதான் பிரச்சனையான விடயம். அதனால் தான் தமிழர்களின் நிலை இப்படியிருக்கு.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com