ஜெனீவா சென்று சாட்சியமளித்து நாட்டைக் காக்க நான் தயார்! – சொல்பவர் வேறுயாருமல்ல பொன்சேக்கா!
எதிர்வரும் மார்ச் மாதம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்காக சாட்சியமளிக்க தான் தயாராக இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக்க் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேக்கா குறிப்பிடுகிறார்.
தான் இராணுவத்தினருக்காக முன்னின்று நாட்டைக் காக்க தயாராக இருக்கின்றபோதும், தனிப்பட்ட ஒரு சிலரை பாதுகாப்பதற்கு ஆயத்தமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
“சட்டரீதியாக எங்கள் நாட்டில் அங்கத்துவம் பெற்றுள்ளன சில சர்வதேச அமைப்புக்கள். அவர்களின் சட்டங்கள் எல்லாம் எங்கள் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
எந்தவொரு நேரத்திலும் எந்தவொரு நபருக்காவது இராணுவத்தினர் தொடர்பில் சந்தேகமிருந்தால் அந்த சந்தேகத்தை தீர்ப்பதற்கு – யுத்தக் காலப்பகுதியில் குற்றங்கள் நிகழ்ந்தனவா இல்லையா எனச் சொல்வதற்கு நான் தயாராகவிருக்கின்றேன். இராணுவத்தினருக்காக நான் முகங்கொடுத்து நாட்டின் கௌரவத்தைப் பாதுகாப்பேன்!
என்றாலும், யாரேனும் ஒருவர் குற்றமிழைத்திருந்தால் அவருக்காக வாதாடி அவரைக் காப்பாற்ற நான் முனைய மாட்டேன்.
நான் இராணுவத்தினருக்காகவே கதைப்பேன். மனித உரிமைகளைக் கருத்திற்கொண்டு யுத்த்த்தில் ஈடுபடுங்கள் என நான் இராணுவத்தினருக்கு ஆணையிட்டிருந்தேன். என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
1 comments :
He was the true eye witness and his evidences are vital.Thank you for your courage and wisdom
Post a Comment