பாராளுமன்ற தெரிவுக்குழுவின் காலம் இன்னும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பு!
சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறி பாலடி சில்வா சமர்ப்பித்த யோசனைக்கினங்க தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய அரசியல் அமைப்பை தயாரிக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் காலத்தை இன்னும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்கு பாராளு மன்றம் இன்று வியாழக்கிழமை தீர்மானித்ததுள்ளது.
அதன் பிரகாரம் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் காலம் ஜூன் மாதம் 21 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த தெரிவுக்குழுவை தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment