Wednesday, December 25, 2013

சண்டியன் ஆன மண்டயன்குழு எம்.பி சிவசக்தி ஆனந்தன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய தமிழர் விடுதலைக் கூட்டனியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி நேற்று முன்தினம் (23) வவுனியாவுக்கு வந்துள்ளார். மண்டயன்குழுவைச் சேர்ந்த வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தனிடம் வழமை போன்று தம்பி எனக் கூப்பிட்டவாறே சென்றுள்ளார்.

அவரும் வாங்க ஐயா எனக் கூப்பிட சங்கரியார் சிவசக்தி ஆனந்தனின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அங்கு இருவரும் கதைச்சுக் கொண்டிருக்கும் போது நாளை( நேற்று 24) வவுனியாவில் நடக்க இருக்கும் கூட்டத்திற்கு என்னை ஏன் கூப்பிடவில்லை. என சங்கரி கேட்டுள்ளார். அப்போது நீ தானே என்னை தோற்கடிக்க ராஜகோணேஸ்வரனை கட்சியில சேர்த்திட்டாய். அவன் வன்னியில தேர்தல் கேட்கப் போறானாம் என்று பதிலளித்துள்ளார். அப்போது ஏன் இப்படி ஆனந்தன் கதைக்கிறாய்? நான் என்ர கட்சியைப் பலப்படுத்த தானே வேணும் எனக் கூற ஆத்திரம் அடைந்த ஆனந்தன் தூசன வார்த்தைகளைப் பேசிக் கொண்டு ஆனந்த சங்கரிக்கு அடிக்கப் போயுள்ளார்.

வயசு போன சங்கரியார் திகைத்துப் போய் பெரிசா சத்தம் போட அவரது மெய்பாதுகாவலர்கள் வந்து கூட்டிக் கொண்டு போட்டினமாம். மாப்பு தொடங்கீற்றப்பா சீற்றுக்கு சண்டை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com