Friday, December 20, 2013

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர்கள் எச்சரிக்கை! யாழ். வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு!

யாழ். போதனா வைத்தியசாலையில் தொண்டர் ஊழியர்கள் இன்று ஏழாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள துடன், தங்களுடைய போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக் காவிடில் விபரீதமான முடிவுகளை எடுக்கவேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்ததையடுத்து யாழ் வைத்தியசாலை வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநருடன் நேற்றுநடைபெற்ற சந்திப்பில், தொண்டர்களில் 80 பேருக்கு முதற்கட்டமாக நிரந்தர நியமனம் வழங்குவதாகவும், ஏனையவர்களுக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஒப்பந்தடிப்படையில் பணியில் இணைத்துக் கொள்ளப்படுவதாகவும், உறுதிமொழியளிக்கப்பட்டது. எனினும் இதனை இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதே வேளை யாழ்.போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாக தொண்டர் ஊழியர்களாக பணியாற்றிவரும் அனைவருக்கும் இந்நியமனம் வழங்கப்படவேண் டுமெனவும், அவ்வாறு இல்லை என்றால் எங்கள் முடிவுகள் பாரதூரமாக அமையு மென இவர்கள் எச்சரித்தனர்.

இதனால் யாழ்.போதனா வைத்திய சாலையில் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாது பாதுகாப்பதற்காக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் விடுத்த கோரிக்கையை அடுத்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பொஸிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment