வடக்கு கிழக்கு மாணவர்களின் பரீட்சை முடிவுகள் வெளிப்படுத்துவது என்ன? எல்.ரி.ரி.ஈ.யின் போலிப் பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி!
அரசாங்கப் படைகள் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஆக் கிரமிப்பு செய்தால் தமிழ் மாணவர்களின் கல்வி சீர்குலை ந்து போய்விடும் என்ற எல்.ரி.ரி.ஈ.யின் போலிப் பிரசாரம் தவறானது என்பதற்கு வடக்கு கிழக்கு மாணவ, மாண வியரின் பரீட்சை முடிவுகள் சான்று பகிர்வதாக விசேட அதிரடி பொலிஸ் படையின் முன்னாள் தளபதியும், இளைப் பாறிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய நிமால் லியூகே தெரிவித்துள்ளார்.
எல்.ரி.ரி.ஈ. ஒழிக்கப்பட்டு நாலாண்டுகளில் வடமாகாண மாணவ, மாணவியரின் கல்வித்தரம் உயர்ந்திருக்கிறது. 2013ம் ஆண்டின் ஜி.சி.ஈ. உயர்தரப் பரீட்சையில் 63.3 சதவீதமான மாணவர்கள் வெற்றி யீட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வடமாகாணத்தின் கீழ் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற் றும் மன்னார் மாவட்டங்கள் வருகின்றன. பொலிஸ் அதிரடிப்படையின் தளபதியாக திரு. யூகே இருந்த போது நான்காவது ஈழம் யுத்தத்தில் அவர் ஆயுதப்படைகளின் செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்தார்.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களும், வடக்கு மாகாண த்தில் உள்ள மாணவர்களும் இப்போது கல்வித்துறையில் சாதனை படைத்துள் ளனர். ஜி.சி.ஈ. உயர்தரப் பரீட்சையில் இந்த பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர் களில் 60.1சதவீதமானோர் சித்தியடைந்துள்ளார்கள்.
வடக்கு, கிழக்கு மாணவர்களின் பரீட்சை முடிவுகள் ஜெனீவாவில் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை கொடுமைப்படுத்தவில்லை என்பதை எடுத் துக்காட்டுவதற்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்குமென்றும் திரு.யூகே மேலும் தெரிவித்தார்.
பயங்கர வாதிகளிடமிருந்து இந்த மாகாணங்கள் விடுவிக்கப்பட்ட பின்னரே மாண வர்கள் இப்பரீட்சையில் சாதனை புரிந்துள்ளதாகவும் திரு.யூகே தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment