காதலர் சுகம் அனுபவிக்க கட்டணம் அறவிட்ட தனியார் பஸ் அனுமதிப்பத்திரம் ரத்து!
குருணாகலையில் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு காதல் சுகம் அனுபவிப்பதற்காக பணம் பெற்றுக் கொண்டு பஸ் வண்டியில் இடமளித்த பஸ் வண்டியின் அனுமதிப் பத்திரத்தை வடமேல் மாகாண பொது மக்கள் போக்கு வரத்து அதிகார சபை ரத்து செய்துள்ளது.
பயண நேரம் வரை தரிப்பிடமொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த பஸ் வண்டியிலேயே பாடசாலை மாணவ, மாணவிகளான காதல் ஜோடிகளுக்கு காதல் சுகம் அனுபவிக்க பணம் பெற்றுக்கொண்டு இடமளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதேசமயம், கடந்த வாரம் குருணாகல் சிலாபம் வீதியின் முன்னேஸ்வரம் பகுதியில் இரண்டு பெண்களின் உயிர்பிரிய காரணமாக விருந்த பஸ் வண்டியின் அனுமதிப்பத்திரமும் ரத்து செய்யப்பட்டதாக அதிகார சபை அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment