Thursday, December 12, 2013

மேக்கப் செய்து கொண்டே தாய்ப்பால் கொடுத்த பிரேசில் அழகியால் சர்ச்சை!!

பிரேசில் நாட்டை சேர்ந்த மோடலிங் பெண் ஒருவர் தனது ஒரு வயது மகளுக்கு தாய்ப்பால் கொடுத்துகொண்டே மேக்கப் போடுவது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.தாய்ப்பால் கொடுக்கும் வழக்க த்தை மற்ற பெண்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த புகைப் படத்தை வெளியிட்டதாக டுவிட்டரில் அவர் கூறியுள்ளார்.

பிரேசில் நாட்டை சேர்ந்த கிசெலே என்பவர் சமூக இணையதளம் Instagram மூலமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் தனது ஒரு வயது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கின்ற போது அவருடைய உதவியாளர்கள் அவருடைய தலைமுடியையும், நகத்தையும் அழகுபடுத்திக் கொண்டிருந்தனர்.

பிரேசில் நாட்டு பெண்களிடம் தாய்ப்பால் கொடுக்கும் வழக்கத்தை பிரபலப்படுத்து வதற்காக தான் யோசித்து இதுமாதிரியான வித்தியாசமான புகைபடத்தை எடுத்ததாகவும் இதற்காக தனது உதவியாளர்களுக்கு அவர் நன்றி கூறிக் கொண்ட தாகவும் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு எவ்வளவுதான் சத்தான உணவு கொடுத்தாலும், அது தாய்ப்பாலுக்கு இணையாகாது என்றும் பிரேசில் பெண்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், தனது டுவிட்டர் பக்கத்தில் ´Breast is Best´ என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக தளத்தில் வெளியானவுடன் பெரும் சர்ச் சையை கிளப்பியுள்ளது. தாய்ப்பால் கொடுப்பதை கிசெலே கொச்சைப்படுத்தி யுள்ளார் என்று ஒருசிலர் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மற்றும் பலர் இந்த புதிய முயற்சியை பாராட்டியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com