தந்தையைப் போலவே தனயன் நானும் கட்சிக்காக உயிர்நீப்பேன்! - சஜித்
தானும் தனது தந்தை ரணசிங்க பிரேமதாசவைப் போல கட்சிக்காக உயிர்நீக்கத் தயாராகவிருப்பதாக ஹம்பாந்தோட்டைப் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகிறார். பெலியத்தையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்து ள்ளார். தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்
இன்று சிலர் கட்சியிலிருந்து சிலரை நீக்குவது பற்றியே கதைக்கிறார்கள். சேர்ப்பதல்ல. தலைமைப் பீடத்திற்கு வருமாறு ஒரு பக்கம் எனக்கு அழைப்பு வருகின்றது. மறுபக்கம் வராவிட்டால் வெட்டி வீசுவதாகச் சொல்லப்படுகிறது…
ஒவ்வொருவரினதும் சவால்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் நான் சளைப்பவன் அல்லன். கட்சியின் வெற்றிபற்றியே நான் சதாவும் சிந்திக்கிறேன். அடிக்கடி தோல்வியைத் தழுவி, பதவியைத் தக்க வைத்து கதிரையைச் சூடேற்றி தனக்காக காட்சிதருகின்ற அரசியல் கூத்துக்கு நான் ஒருபோதும் தலைசாய்க்க மாட்டேன்.
எனது தந்தை சொன்னதுபோல சத்தியம் என்றேனும் ஒருநாள் ஜெயிக்கும். எனது தந்தை இந்த ஐக்கிய தேசியக் கட்சிக்காக அனைத்தையும், ஏன் தன்னையே இழந்தார். அப்படிப்பட்ட மக்கள் தலைவர் அவர்.
அவரைப் போலவே நானும் ஐக்கிய தேசியக் கட்சிக்காக உயிர் நீக்கவும் தயாராக இருக்கின்றேன் என்பதை இவ்விடத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment