Sunday, December 8, 2013

இலங்கை பிரச்சினையை துல்லியமாகத் தெரிந்து வைத்திருப்பவரை உபயோகிக்க தெரியாத த.தே.கூ! மன்சூர்

இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக ஆரம்ப காலம் முதல் இன்றுவரை இவ்விடயத்தை மிகவும் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கும் இந்திய அரசியல்வாதி என்றால் அது இன்றைய இந்திய மத்திய அரசாங்கத்திலுள்ள தலைவர்களுள் ஒருவரான மத்திய அமைச்சர் சிதம்பரம் அவர்களே ஆவார் என அமைச்சர் ஏ. ஆர். எம். மன்சூர் தெரிவித்தார்.

இல்லாறு இலங்கை அரசாங்க தரப்பிலுள்ள நியாயங்களையும், தமிழர் தரப்பு தேவைகளையும் அவர் நன்கு தெரிந்து வைத்துள்ளார். அவரை வைத்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை விடுத்து இன்று அவரையே விமர்சிக்கும் அளவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில தலைவர்கள் செயற்படுவது மிகுந்த வேதனை அளிப்பதாக முன்னாள் அமைச்சர் ஏ. ஆர். எம். மன்சூர் தெரிவித்தார்.

திரு. சிதம்பரத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தவன் எனும் வகையில் எனக்கு அவரைப் பற்றி நன்கு தெரியும். அவர் இலங்கையில் பிரச்சினை தீர வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டிச் செயற்பட்டவர் இன்றும் செயற்பட்டு வருகிறார். அவர் பக்கச் சார்பின்றி நடு நிலையாகச் செயற்படக் கூடிய ஒருவர். ஆனால் இன்று அவரை விளங்கிக் கொள்ளாத இலங்கையிலுள்ள சில தமிழ் அரசியல்வாதிகள் அவரை விரோதியாகப் பார்க்கின்றனர். இது முற்றிலும் தவறானது எனவும் முன்னாள் அமைச்சர் மன்சூர் தெரிவித்துள்ளார்.

1 comments :

Anonymous ,  December 8, 2013 at 3:52 PM  

He may be an expert advocate rewarding Mr.Chithamparam

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com