சிறுகதைப் போட்டியில் ஷாஜஹான் இரண்டாம் இடம்!
கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு அரச ஊழியர்களுக்கிடையில் அகில இலங்கை ரீதியில் (2013) நடத்திய அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் கவிஞரும் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கலாநெஞ்சன் ஷாஜஹான் சிறுகதைப் போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.
இற்கான பரிசளிப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை (13) முற்பகல் தேசிய நூதனசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்கவிடமிருந்து கலாநெஞ்சன் ஷாஜஹான் அதற்கான சான்றிதழ், பணம் மற்றும் புத்தகப் பரிசுகளைப் பெற்றுக் கொண்டார்.
ஜனாப் எம்.இஸட். ஷாஜஹான் இவ்வருடம் நீர்கொழும்பு பிரதேச செயலகம் நடத்திய சாகித்திய விழாவில்; கவிதை, சிறுகதை மற்றும் பாடலாக்கம் ஆகிய போட்டிகளில் மூன்று முதலிடங்களையும், கம்பஹா மாவட்ட செயலகம் கலாசார அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து நடத்திய 2013ஆம் ஆண்டுக்கான கம்பஹா மாவட்ட சாகித்திய விழாவிற்கான இலக்கியப் போட்டி நிகழ்ச்சிகளில்; பாடலாக்கப் போட்டியில் முதலாமிடத்தையும் சிறுகதைப் போட்டியில் இரண்டாமிடத்தையும் கவிதைப் போட்டியில் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
இவர் இரண்டு கவிதைத் தொகுதிகளையும் இஸ்லாமியப் பாடல் தொகுதிகள் இரண்டினையும் வெளியிட்டுள்ளதோடு, பல்வேறு இலக்கியப் போட்டிகளில் தேசிய ரீதியில் பல பரிசில்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார். கல்வி முதுமாணி உயர் பட்டப்படிப்பு மாணவரான இவர் கொழும்பு ஹமீத் அல் ஹசைனி கல்லூரி, மருதானை ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். சாமஸ்ரீ தேச கீர்த்தி, கவித்தீபம் ஆகிய பட்டங்கள் வழங்கி கலாநெஞ்சன் ஷாஜஹான் கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment