கொழும்பு உணவகங்களில் திடீர் சோதனை! பழைய ரொட்டித் துண்டுகளே கொத்து ரொட்டியானது !!
உணவு தயாரிக்கும் மற்றும் விநியோகிக்கும் இடங்கள் குறித்து ஆராய்வதற்காக நேற்று ஆரம்பிக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கை மூலம் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.முதல் நாள் சோதனையின் போது பழுதடைந்த பொருட்களை வைத்து உணவுகள் தயாரிக்க ப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்களின் உற்பத்தி விநி யோகம், விற்பனை மற்றும் தயாரிப்பு என்பன தொடர் பாக நேற்று முதல் திடீர் சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டன.
பொது மக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சுகாதார அமைச்சு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை கொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதார திணைக்களம் என்பன இணைந்து இந்தத் திட்டத்தை ஆரம்பித்திருந்தன. இந்தத் திட்டத்தின் கீழ் மருதானை பிரதேசத்திலுள்ள, ஹோட்டல்கள், சிற்றுண் டிச்சாலைகள்,வாசனைத் திரவியங்கள் விற்கும் இடங்கள் அடங்கலான 150 இடங் கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
இவற்றில் 99 வீதமான இடங்கள் மோசமான நிலையில் காணப்பட்டதோடு உணவு தயாரிக்கப்பயன்படுத்தும் பொருட்கள் அவற்றை களஞ்சியப்படுத்தி வைத்துள்ள இட ங்கள் என்பன பொதுமக்கள் பாவனைக்கு உவப்பற்ற முறையில் இடம் பெறுவதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி கடைகள் அனைத்திற்கும் எதிராக வழக்கும் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொத்து ரொட்டி தயாரிப்பதற்காக பல வாரங்கள் பழைய ரொட்டித்துண்டுகளே பயன் படுத்தப்பட்டிருப்பது இந்த சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. சில்லிபேஸ்ட் (Chili Paste) தயாரிப்பதற்காக, மீன், அப்பளம், ரோல்ஸ் போன்ற உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்காக உபயோகித்த எண்ணெய்யே பயன்படுத்தப்பட்டுள்ளது.
சிறுவர்கள் மத்தியில் பிரபலமான கடலை மாவினால் தயாரிக்கப்படும் முறுக்கு செய்வதற்காக வண்டுகள், பூச்சிகள் நிறைந்த பழைய மாவே உபயோகிக்கப்பட் டிருப்பது பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேங்காய் துருவுவதற்காக பயன்படுத்தப்படும் தேங்காய் துருவிகள் ஒரு போதும் சுத்தம் செய்யப்படாமலே உபயோகிக்கப்பட்டுள்ளன. சில கடைகளில் பழச்சாறு தயா ரிப்பதற்காக பழுதடைந்த பழ வகைகளே பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமை ச்சு தெரிவித்தது.
இவ் உணவக சோதனைகள் மீண்டும் 5 நாட்களுக்கு தொடரும் என சுகாதார அமை ச்சு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment