Tuesday, December 3, 2013

இன்று சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் ; புதிய பாதையை ஏற்படுத்த உலக நாடுகள் முன்வரவேண்டும் -ஐ.நா செயலாளர் நாயகம்

மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்படும் தடைகளை உடைத் தெறிந்து புதிய பாதையை ஏற்படுத்துவதற்கு உலக நாடுகள், ஐ.நா. அமைப்பு, சிவில் சமூகப் பிரதிநிதிகள், வர்த்தகப் பிரமுகர்கள் முன்வர வேண்டுமென ஐ.நா. செயலாளர் நாய கம் பான்கீ மூன் கேட்டுள்ளார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டி ருக்கும் அறிக்கையிலேயே அவர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதா வது, உலகில் அதிகமான மாற்று வலுவுள்ளோர் உள்ளனர்.

மாற்றுதிறனாளிகளிடம் காணப்படும் அனைத்துத் தடைகளையும் நீக்கி அவர்களையும் சமூகத்தில் இணைத்து அவர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு ஏதுவாக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். செப்டம்பரில் நடைபெற்ற ஐ.நா. பொதுக்கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் பற்றி ஆராயப்பட்டிருந்தது. மாற்றுத் திறனாளிகளின் உயிர்களுக்கான பாதிப்புகள் மட்டுமன்றி சமூக அபிவிருத்தியில் ஏற்படும் தாக்கம் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்து அபிவிருத்தியை ஊக்கப்படுத்த உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் கொள்கைத் திட்டங்களை அமுல்படுத்த ஐ.நா. உறுப்பு நாடுகள் மீண்டும் இணங்கியுள்ளன.

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் மற்றும் அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த நாம் கடுமையாகப் பாடுபடவேண்டும். இதற்காகவே ஐ.நா. தலைமையகத்தில் தகவல் நிலைய மொன்றை உருவாக்கியுள்ளோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com