Saturday, December 21, 2013

திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு (படங்கள்) !!

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் நேற்று (20) மனித எச் சங்கள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் திருக்கேதிஸ்வரம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மாந்தை சந்தியில் இருந்து திருக் கேதீஸ்வரத்திற்கு செல்லும் பாதையில் இருந்து சுமார் 75 மீற்றர் தொலைவில் குறித்த மனித எச்சங்கள் கண்டெ டுக்கப்பட்டுள்ளன. நேற்று அந்தப் பகுதியில் குடி நீர் இணை ப்பை வழங்குவதற்காக பணியாளர்கள், வீதிக்கரையில் பள் ளம் தோண்டிய போது, இரண்டு மண்டையோடுகளும், வேறு சில பாகங்களும் காணப்பட்டுள்ளன.

பின்னர் உடனடியாக அருகில் உள்ள இராணுவத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இராணுவத்தினரும் மன்னார் பொலிஸ் நிலைய பொறு ப்பதிகாரி துஸார தலுவத்தை உட்பட பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஏனைய பகுதிகள் நாளை சனிக்கிழமை நீதவான் முன்னிலையில் தோண்டப்படவுள்ளன.

குறித்த பகுதி கடந்த காலங்களில் அதியுயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட தோடு, தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலதிக விசாரனை களை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











No comments:

Post a Comment