கீதாவிடத்து பண்புமில்லை கல்வியறிவுமில்லை என்கிறார் அஜித்!
பெந்தர எல்பிடிய அமைப்பாளர் கீதாவிடத்தில் பண்பு மில்லை… கல்வியறிவுமில்லை என மாகாண சபை உறுப்பினர் அஜித் பிரசன்ன குறிப்பிட்டார். தென் மாகாண சபையின் முதலமைச்சராவதற்குரிய அனைத்துத் தகுதி களும் தன்னிடமே இருக்கின்றது என அவர் குறிப்பிடு கிறார்.
“அவர் இதற்கு முன்பும் ஒருமுறை தேர்தலில் போட்டியிட்டார்தானே.. அன்று அவருக்கு 34,000 வாக்குகள் கிடைத்தன. இன்னும் 14,000 தேவைப்பட்டது. அன்று அவர் நல்ல அழகாக இருந்தார். யுவதியாக இருந்தார். பிரபல்யமாய் இருந்தார். அப்படியிருந்தும் அவரால் வெல்ல முடியாமல் போனதே… இனித்தான் வெல்வாரா?
அவரது தொகுதியில் இரண்டு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருவரினதும் ஆதரவு அவருக்கு இல்லை. ஏன் தெரியுமா? அவர் பொருத்தமில்லை…. பண்பென்பது அவரிடமில்லை… கல்வி அறிவும் இல்லை… திறமையான நடிகை என்பது மட்டும் உண்மை. அவர் முதலமைச்சராக வரவுள்ளதாக்க் கூறி முதலமைச்சரையும் சிந்திக்க வைத்தார்.
என்னை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க ஆவன செய்யுமாறு நான் ஜனாதிபதியிடம் கேட்பேன். நான் அதற்கு நன்கு பொருத்தமானவன். நான் ஒரு பட்டதாரி… வழக்கறிஞர்… மனோவியல் ஆலோசகர்.. அநீதிக்கெதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவன். எனவே, முதலமைச்சராக வரவேண்டிய தகுதி கீதாவுக்கல்ல… எனக்கே உள்ளது” எனவும் அஜித் பிரசன்ன குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment