வெளிநாடுகளிற்கு தங்க ஆபரணங்களை அணிந்து செல்வதில் முன்வைக்கப்பட்ட சட்டம் ரத்து -இலங்கை சுங்கம்!!
தங்க ஆபரணங்கள் அணிந்து கொண்டு வெளிநாடுகளுக்கு செல்வது தொடர்பிலான சட்டத்தில் அண்மையில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.தங்க ஆபரணங்கள் சட்டவிரோதமான முறையில் கடத்தப்படுவதனை தடுக்கும் நோக்கில் சுங்கப் பிரிவினர் புதிய நியதிகளை அறிவித்திருந்தனர். தற்போது வெளிநாடுகளிற்கு தங்க ஆபரணங்களை அணிந்து செல்வது குறித்து முன்வைக்கப்பட்ட புதிய சட்டத்தை ரத்து செய்ய இலங்கை சுங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, பெண்கள் அதிக பட்சமாக 15 பவுண்களையும், ஆண்கள் உச்சபட்சமாக 5 பவுண்களையும் அணிய முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.எனினும் மக்களின் கோரிக்கை காரணமாக இந்த சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment