யாழ்.கோண்டாவில் சபரி மலை ஐயப்ப தேவஸ்தான மகரஜோதி மண்டல பூர்த்தி பெருவிழாவை முன்னிட்டு ஐயப்பன் யாழ். வீதிகளை வலம் வரும் நிகழ்வு நல்லூர் நடராஜா பரமேஸ்வரி மணி மண்டபத்தில் இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமான பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, ஐயப்பன் அலங்கரிக்கப்பட்ட யானை மீதேறி மதியம் 12.00 மணிமுதல் யாழ் வீதிகளில் வலம் வந்தார்.
இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த சிங்காரி மேளம் முழங்க தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மேல் ஐயப்பன் எழுந்தருளி இருமுடியுடன் ஐயப்பன் சாமிமார்கள், அடியவர்கள், புடை சூழ யாழ் வீதிகளை வலம் வந்து கோண்டாவில் ஐயப்பன் கோவிலை சென்றடைந்தார்.
No comments:
Post a Comment