வானிலிருந்து மர்மப்பொருட்கள் விழுந்துள்ளன- தம்புத்தேகம......
மர்மப்பொருட்கள் சில வானிலிருந்து நேற்று விழுந்துள் ளதாக தம்புத்தேகம, இகிரிவௌ, வெல்யாய பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் தெரிவித்தனர். சுமார் பத்து ஏக்கர் வய ற்காணிகளில் இவ்வாறான மர்மப்பொருட்கள் பரவலாக விழுந்துள்ளதாகவும் நீர்நிலைகளில் விழுந்தவை மிதந்து கொண்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
வானிலிருந்து விழுந்த மர்மப்பொருட்கள் தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் ஸ்தலத்திற்கு விரைந்து சென்றதாக வானிலை ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment