Sunday, December 1, 2013

பிரதேச சபைத் தலைவருக்கு எதிராக பன்றி இறைச்சி!

பிரதேச சபைத் தலைவருக்கெதிராகவுள்ள உறுப்பினர்களின் மனத்தை மாற்றுவதற்காக மாந்திரீகம் செய்யப்படுகின்றது என்ற சந்தேகத்தின் பேரில் அந்த மாந்திரீகத்தைச் செயலிழக்கச் செய்வதற்காக, இனந்தெரியாத ஒரு நபரினால் ஹோமாகம பிரதேச சபைக்குள் இரகசியமாக உள்நுழைந்துள்ள ஒருவர், தான் கொண்டுவந்த பன்றி இறைச்சிப் பொதியை மாதாந்த ஒன்றுகூடல் நடாத்தும் இடத்தில் வைத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

சென்ற மாதமும் இவ்வாறே பன்றி இறைச்சிப் பொதியொன்று இருக்கக் கண்டுபிடித்தனர். இம்முறை பன்றியிறைச்சிப் பொதி பிரதேச சபையின் கூட்டங்கள் நடாத்தப்படுகின்ற மண்டபத்தில் மந்திரிமார் அமர்கின்ற ஆசனத்திலேயே வைக்கப்பட்டிருந்தது.

அந்த மாந்திரீகத்தில் சந்தேகம் எழுந்துள்ளதால், பிரதேச சபையினால் வழங்கப்படுகின்ற பகல் சாப்பாட்டையும் சில உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர். ஹோமாகம பிரதேச சபையில் ஏற்படுகின்ற ஊழல்கள் தொடர்பில் அச்சபையில் உள்ள உறுப்பினர்கள் பலரும் அடிக்கடி பிரதேச சபைத் தலைவரிடம் கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

இருந்தபோதும், எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள வரவு - செலவு முன்வைக்கப்படும்போது, தலைவருக்கு ஆதரவாக சிலர் வாக்களிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com