Tuesday, December 31, 2013

நாளை முதலாம் திகதி முதல் 92 ஒக்டேயின் பெற்றோல்!

நாளை முதலாம் திகதி தொடக்கம் நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிலை யங்களிலும் 90 ஒக்டேயின் பெற்றோலுக்கு பதிலாக 92 ஒக்டேயின் பெற்றோல் விற்பனை செய்யப்படும் என கனிய வளத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.


இதன்மூலம் அமைச்சுக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் நட்டம் ஏற்படும் எனினும் அந்த சுமையை நாட்டு மக்கள் மீது சுமத்தும் வகையில் பெற்றோல் விலை உயர்த்தப்பட மாட்டாதென கொழும்பில் நேற்று(30.12.2013) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் ஈரானிடம் இருந்து மசகெண்ணெய் கொள்வனவு செய்யப்படுவதில்லை என்பதுடன் தற்போது ஓமான், அபுதாபி ஆகிய நாடுகளிலிருந்தே மசகெண்ணெய் இறக்குமதி செய்யப் படுவதாகவும் அந்த மசகெண்ணெய் 600 வகையான சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனைவிட வடபகுதிக்கான எரிடிபொருள் விநியோகத்தை இலகுவாக மேற்கொள்வதற்காக தற்போது பளைப் பகுதியில் எண்ணெய்க் களஞ்சியம் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாகவும் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

No comments:

Post a Comment