Tuesday, December 10, 2013

வவு­னியா வடக்கில் மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­பட்­டோரில் 90% வீட்­டுத் திட்டம் வழங்­கப்­பட்­டுள்­ளது- பிர­தேச செய­லாளர் பரந்­தாமன்!

வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்களில் 90 வீதமானவர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதாக சமூக நல்லிணக்கம் தொடர்பான பிரதேச மட்ட கூட்டம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ரஜீவ விஜயசிங்க தலைமையில் நடைபெற்ற போது வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க . பரந்தாமன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வவுனியா வடக்கில் அனைத்து திணைக்களங்களும் இணைந்து செயற்படுவதன் காரணத்தால் நாம் அடைவு மட்டத்தில் முன்னேற்றம் கண்டுள்ளோம். இந்நிலையில் மேலும் எமது செயற்பாடுகளை முன்னோக்கி செயற்படுத்த நல்லிணக்கம் தொடர்பான இக்கூட்டங்கள் பயனுறுதி மிக்கதாக அமையும் எனக்குறிப்பிட்டார்.

இந் நிலையில் வவுனியா வடக்கில் பல உள்ளூர் வீதிகள் திருத்தம் செய்யப்படாமல் உள்ளதால் விவசாயத்தை மையமாக கொண்ட இப்பகுதி மக்கள் தமது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக கொண்டு செல்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும், இதற்கு காரணம் இவ்வீதிகளை புனரமைப்பு செய்வதற்கு போதுமான நிதி வசதிகள் பிரதேச சபைகளிடம் இன்மையே எனக்குறிப்பிட்டதுடன், இந்த வீதிகளை புனரமைப்பு செய்வதற்கு போதுமான நிதியுதவிகள் தேவைப்படுகின்றது எனக்குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com