ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து 90 மில்லியன் யூரோ கடன் பெற்றுக் கொள்கிறது இலங்கை!
இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து 90 மில்லியன் யூரோக்களை (16,290 மில்லியன் ரூபா) கடனாகப் பெற்றுக்கொள்ள கைச்சாத்திட்டுள்ளது.
சிறிய மத்திய அளவிலான விவசாய அபிவிருத்திக்காகவே இந்தக் கடன்தொகை பயன்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் அந்தக் கடன் தொகையிலிருந்து இலங்கையின் இன்னும் பல முக்கிய வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 2005 - 2015 காலப்பகுதியில் ஐரோப்பிய நட்புறவினால் கிடைக்கப்பெற்றுள்ள முழுத்தொகை 670 மில்லியன் யூரோக்களாகும்.
0 comments :
Post a Comment