80 வயதாகும் போது குறைந்தது 20 பற்களாவது இருக்க வேண்டும்: இருக்கிறதா?
ஒருவருக்கு 80 வயதாகும் போது 20 பற்களாவது இருக்க வேண்டும் என்பது சர்வதேச தரம் ஆனால் இலங்கையில் ஒருவருக்கு 70 வயதாகும் போது ஒரு பல் கூட இருப்பதில்லை என சுகாதார அமைச்சு குறிப்பிட்டதுடன் இதனை மாற்றியமைப்பதற்கான புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய பிள்ளைகளின் பல் சுகாதாரம் குறித்து விசேட வேலைத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சிறுவர்களுடைய சிறு வயதிலிருந்தே அவர்களின் பல் சுகாதாரம் குறித்து கவனம் செலுத்தும் வகையில் விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பான கணிப்பீடு ஒன்றை செய்யும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment