கராத்தே வகுப்பு நடத்தும் 8 மாத கர்ப்பிணிப் பெண் (படங்கள்) !!
அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் 8 மாத கர்ப்பிணியான நிலையிலும் கராத்தே பயிற்சிகளில் ஈடுபடுவதுடன் ஏனையோருக்கு கராத்தே கற்பித்தும் வருகிறார்.
31 வயதான கிறிஸ்டல் கிறீன் எனும் பெண், தனது உடற்பயிற்சிக்கூடத்தில் பெண்களுக்கு மாத்திர மான கராத்தே வகுப்புகளை நடத்துபவர்.தற்போது அவர் 8 மாத கர்ப்பிணியான நிலையிலும் தொடர்ந்து வகுப்புகளை நடத்தி வருகிறார்.
தனது குடும்பத்தினர் பலரும் தற்காப்புக் கலையில் ஈடுபட்டு வந்ததால் தானும் அதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தாக கிறிஸ்ல் கிறீன் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் நீச்சலுடை அழகுராணிப் போட்டியொன்றுக்குத் தயாரான போது அவர் கர்ப்பமடைந்தாராம்.தனது உடலை ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் பேணுவ தற்கு மருத்துவர்கள் ஊக்கமளிக்கின்றனர் என்கிறார் இப்பெண்.
0 comments :
Post a Comment