காதலியினால் மனமுடைந்த காதலன் 7வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!!
காதலி பொருட் கொள்வனவு செய்வதை நிறுத்த மறுத்ததால், மனமுடைந்த காதலன் ஷாப்பிங் மாலின் 7வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பான சம்பவம் ஒன்று சீனாவில் நடந்துள்ளது.சீனாவின் சூசோ மாகாணத்தில் உள்ள சந்தை தொகுதியில் கடந்த சனிக்கிழ மையன்று கிறிஸ்மஸ் பண்டிகைக்கான பொருட்கள் வாங்கு வதற்காக தனது காதலியுடன் அங்கு சென்றுள்ளார் டோ ஸ்யோ என்ற 38 வயதுக்காரர்.
கிட்டத்தட்ட 5 மணி நேரம் பொருட் கொள்வனவு செய்த பிறகும், இன்னும் ஷூ வாங்க வேண்டும் என அப்பெண் கூறியதாகத் தெரிகிறது. டோ எவ்வளவோ எடுத்துக் கூறியும் அப்பெண் கேட்கவில்லையாம்.அவர்களுக்கிடையே காரசாரமான விவாதம் நடந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த டோ, தான் சொல்வதைக் காதலி கேட்கவில்லையே என்ர ஆத்திரத்தில் அவர்கள் நின்றிருந்த 7வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.மாடியிலிருந்து கீழேக் குதிப்பதற்கு முன்னர், தான் கையில் வைத்திருந்த பைகளைத் தூக்கி டோ கீழே எறிந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment