சக மாணவியை முத்தமிட்ட 6 வயது சிறுவன் தற்காலிக நீக்கம்!
அமெரிக்காவின் கொலொரடோ அருகே உள்ள கேனான் நகரில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பாடசாலையில் கல்வி கற்கும் 6 வயது சிறுவன் தன்னுடன் படிக்கும் சக மாணவியை முத்தமிட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டி இவன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக கூறி பாடசாலை முதல்வர் தற்காலிக நீக்கம் செய்துள்ளார்.
இதற்கு சிறுவனின் தாயார் ஜெனிபர் சவுந்தாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் எனது மகன் சக மாணவியின் கையில்தான் முத்தமிட்டான் என்பதில் தவறு எதுவும் இல்லை தனது அன்பை வெளிப்படுத்த இந்த வழியை மகன் கையாண்டு இருக்கிறான இதை பாலியல் தொந்தரவு என மிக கடுமையான குற்றமாக கருதக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment