பிரான்ஸ் கடன் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள திருகோணமலை - மட்டக்களப்பு பாதைக்காக கிலோமீற்றருக்கு 56.25 மில்லியன் ரூபா செலவாகியுள்ளதாக பாராளுமன்றக் கூட்டத் தொடரில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கா எழுப்பிய வினாவொன்றுக்கு விடையளிக்கும்போது, செயற்றிட்டத்திற்குப் பொறுப்பான அமைச்சர் நிர்மல கொத்தலாவல இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
98.6 கிலோமீற்றர் நீளமான பாதையாக அப்பாதை உள்ளதுடன், அதில் 5 பாலங்களும், 82 கொங்ரீட் குழாய்களும் உள்ளடங்குகின்றன.
அதன் நிர்மாணப் பணிகளை சீனத் துறைமுக பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனம் (China Harbor Engineering Corporation) மேற்கொண்டுள்ளதுடன், அதற்கான கடனை பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவனமொன்றே வழங்கியுள்ளது.
(கேஎப்)
No comments:
Post a Comment