திருமணச் செலவு ரூபாய் 500 கோடி!!!
ஸ்பெயினை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான பிரபல தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் சகோதரரின் மகள் திரு மணம் 500 கோடி ரூபாய் செலவில் நடைபெற்றது.கடந்த 7ம் திகதி லட்சுமி மிட்டலின் சகோதரரின் மகள் சிருஷ்டி(26) திருமணம் மிகபிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இத்திரு மணத்தில் உணவு பரிமாற்றத்திற்கு மட்டும் இந்தியாவிலிரு ந்து 200 ஊழியர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து மணமகன் வெள்ளை குதிரையிலும் மணமகள் காரிலும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர் திருமண நிகழ்ச்சிகள் முழுவதையும், வீடியோ மற்றும் போட்டோ எடுக்க ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.இந்த திருமணத்தில், மிட்டல் குடும்பத்தினர் மற்றும் முக்கிய வி.வி.ஐ.பி.க்கள் பார்சிலோனா நகர மேயரும் கலந்து கொண்டனர்.
மேலும் இத்திருமணத்தையொட்டி, அப்பகுதியில், போக்குவரத்து தடை செய்யப் பட்டதால் அப்பகுதி எதிர்கட்சித் தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து ள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment